Poochi Viratti | இயற்கை பூச்சி விரட்டி செய்முறை | Organic Farming @ Saveagri.ORG



Poochi Viratti – பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை – Pasumai vivashayam – Pasumai Vikatan – Nammalvar – Vanagam – அய்யா நம்மாழ்வார் – iyarkai vivsayam – Dr. Sivaraman – இயற்கை பூச்சி விரட்டி – Roof Top Organic Farming – Amir Khan – Sathish – Figgfruit – அத்திபழம் – Organicfarm – organic – farming – future farming – 100 acres – multicrops – organic farm

#PoochiViratti #Pasumaivivashayam #PasumaiVikatan #அய்யாநம்மாழ்வார்முறைப்படி #இயற்கைபூச்சிவிரட்டி #OrganicPestController

Mr.Suresh showing process of making Organic Pest Controller.

Poochi Viratti பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி ( Poochi Viratti )  என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது.

இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் கொல்லப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் தாவரத்திலிருந்து விரட்டப்படுகின்றன. எனவே பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.

இயற்கை பூச்சி விரட்டி ( Poochi Viratti ) கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை

1. கசப்பு சுவையுடன் இருக்க வேண்டும். (எ.கா) வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிகாய்
2. இலைகளை ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். (எ.கா) எருக்கு, காட்டமணக்கு
3. ஆடு, மாடு உண்ணாத இலை தழைக்ள்- (எ.கா) ஆடாதோடை, நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, அரளி
4. துர்நாற்றம் வீசும் இலை தழைகள்- (எ.கா) பீச்சங்கு, சீதா, பீ நாரி, ஊமத்தை

இயற்கை பூச்சி விரட்டி சிறப்பான தன்மைகள்:
1 எளிதில் தயாரிக்கலாம்.
2. குறைவான முதலீடு.
3. தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் எவ்விதமான விஷ வீழ்படிவையும் ஏற்படுத்தாது.
4. இயற்கையை பாதிக்காதவை.
5. இயற்கை பூச்சிவிரட்டி கரைசல் 75% பூச்சிவிரட்டியாகவும் 25% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.

watch the Video till end.

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.

https://www.youtube.com/c

source

@ Saveagri.ORG

12 Comments on “Poochi Viratti | இயற்கை பூச்சி விரட்டி செய்முறை | Organic Farming @ Saveagri.ORG”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *