கடந்த ஒரு தசாப்தத்தை இயற்கை விவசாயத்தின் பொற்காலம் என கூறும் அளவுக்கு, உலகம் முழுக்க இந்த தொழில் குறித்த முன்னெடுப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அதேசமயம் இயற்கை விவசாயத்தில் லாபம் என்பது மிகக் குறைவு என்ற விவாதமும் எழுந்து வருகிறது. ஆனால் தாராபுரம் அருகே கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் அர்ச்சனா, இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில் விவரிக்கிறார். தயாரிப்பாளர் – செந்தில் குமார் ஒளிப்பதிவு – நந்தகிஷோர் படத்தொகுப்பு – அபிராஜ் குமார் நிர்வாக இயக்குநர் – டெபராட்டி குஹா நிர்வாக தயாரிப்பாளர் – அறவாழி இளம்பரிதி DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட “DW தமிழ்” யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.